நயினார்கோவில் நாகநாத சுவாமி - சவுந்தர்ய நாயகி அம்மன் திருக்கல்யாணம்
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் நாக நாத சுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண விழா ஜூலை 23 அன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது.
தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி பலம் வருகின்றனர். ஜூலை 31 தேரோட்டம் நிறைவடைந்து, நேற்று முன்தினம் அம்பாள் தபசு மண்டபம் எழுந்தருளி, மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு மேல் நாகநாத சுவாமி, சவுந்தர்ய நாயகி அம்பாள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் ஊஞ்சல் சேவையில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி, திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. தொடர்ந்து நலுங்கு உள்ளிட்ட திருமண சடங்குகள் நடத்தப்பட்டன. இரவு சுவாமி மின் தீப அலங்கார கோரதத்திலும், அம்பாள் தென்னங்குருத்து சப்பரத்தில் திருமண கோலத்தில் வீதி வலம் வந்தனர். இன்றும் நாளையும் ஊஞ்சல் உற்சவம் ஆக., 6 இரவு 7:00 மணிக்கு மஞ்சள் விளையாட்டு, ஆக, 8 காலை 9:00 மணி முதல் 10:39 மணிக்குள் உற்சவ சாந்தியுடன் நிறைவடைகிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகிகள் செய்துள்ளனர்.