கமுதியில் அரசமரம், வேப்பம் மரத்திற்கு திருமணம்
ADDED :1165 days ago
கமுதி: கமுதியில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அருகே உள்ள அரசமரம்,வேப்பம் மரத்திற்கு திருமணம் விழா நடந்தது.இதனைமுன்னிட்டு பருவமழை பெய்து விவசாயம் செழித்து மகசூல் பெற வேண்டி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்கல இசையுடன் அரசமரம்,வேப்பம் மரத்திற்கு திருமணம் நடந்தது.பின்பு சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்யம், வளையல், மஞ்சள் பிரசாதமாக வழங்கப்பட்டது திருமண விழாவில் கமுதி மற்றும் அதனை சுற்றியள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.