உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் : போடி கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் : போடி கோயில்களில் சிறப்பு பூஜை

போடி: ஆடிப்பெருக்கை முன்னிட்டு போடி காசிவிஸ்வநாதர் கோயிலில் கொட்டகுடி ஆற்றோர பகுதியில் மாவினால் ஆன அம்மன் சிலை செய்து பெண்கள் வழிபட்டனர். மஞ்சள் நூலில் பெண்கள் தாலி  மாற்றிக் கொண்டனர்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு முன்னிட்டு ஆற்றோர பகுதியில் மண், மஞ்சள் மாவிலால் ஆன அம்மன் சிலை செய்து பெண்கள் வழிபடுவர். பெண்களின் தாலி நிலைத்து நிற்கவும்,  நிலைத்த காரியம் கைகூடவும், மும்மாரி மழை பெய்யவும், குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்கவும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் தீபாரதனைகள் நடத்துவது ஐதீகம். வெற்றிலையில் சூடம்  ஏற்றி பெருக்கெடுத்து ஓடும் ஆற்று நீரில் மிதக்க விடுவார்கள்.

நேற்று ஆடிப்பெருக்கை கொண்டாடும் வகையில் போடி காசி விஸ்வநாதர் கோயில் அருகே கொட்டடி ஆற்று பகுதியில் மஞ்சள் மாவிலான அம்மன் சிலைகள் செய்து, சிறப்பு அலங்காரத்தில்  ஆடிப்பெருக்கை கொண்டாடி அம்மனை வழிபட்டனர். மஞ்சள் நூலில் பெண்கள் மஞ்சள் தாலி நூல் மாற்றிக்கொண்டனர். ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிவனின் ஆசிபெற்றனர்.

* போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் உள்ள கைலாய கீழச் சொக்கநாதர் கோயில், மேலச்சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம்,  தீபாரதனைகள் நடந்தது.

* வடமலை நாச்சியம்மன் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயில், போடி குலாலர்பாளையம் காளியம்மன் கோயில், தாய் ஸ்தலம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன், நந்தவன காளியம்மன்,  சாலைக்காளியம்மன், புதுக்காலனி ஆதிபராசக்தி கோயில், சுப்ரமணியர் கோயிலில் உள்ள அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !