உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பெருக்கு விழா : பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடிப்பெருக்கு விழா : பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் கோவில்களில் சிறப்பு பூஜை

பெ.நா.பாளையம்: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் வட்டாரங்களில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடந்தன.

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில், சக்தி மாரியம்மன் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில், காமாட்சி அம்மன் கோவில்களில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சிறப்பு  பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, இறைவனை வழிபட்டனர். இதேபோல பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள், பாலமலை ரங்கநாதர்  கோவில், நாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில், நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், இடிகரை உலகளந்த பெருமாள் கோவில், பெரியநாயக்கன்பாளையம் வண்ணான் கோவில்  பிரிவில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில், காளிபாளையத்தில் உள்ள திருமலைராயப்பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  வீடுகளிலும் தங்களுடைய முன்னோர்களின் நினைவை போற்றும் வகையில் அவர்களுடைய படங்களுக்கு மாலையிட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தி, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் உணவு பரிமாறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !