உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பெருக்கு விழா அம்மனுக்கு திருமஞ்சனம்

ஆடிப்பெருக்கு விழா அம்மனுக்கு திருமஞ்சனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் பழமையான வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது.ஆடிப்பெருக்கு விழாவை யொட்டி அம்மனுக்கு, பல்வேறு வகையான நறுமணம் கமழும் திரவியங்கள்,  பழ வகைகள், இளநீர், பால். தேன், தயிர், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

உத்திரமேரூரில், வடவாய் செல்வி துர்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் ஆடிப்பூரத்தையொட்டி விழா நடப்பது வழக்கம்.இந்த ஆண்டிற்காக்கான விழா, கடந்த 1ம் தேதி இரவு,  காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் பால் குட ஊர்வலம் நடந்தது.தொடர்ந்து, உத்திரமேரூர் நங்கையர் கோவில் குளத்தில், அம்மனுக்கு ஜலம் திரட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அங்கு,  மலரால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன.பம்பை, உடுக்கை அடித்து, அம்மனை வர்ணித்து பக்தர்கள் பாடி, அம்மன் வீதியுலா நடந்தது.

அம்மனுக்கு, வீடு, வீடாக பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். நள்ளிரவு 12:00 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில்  மாரியம்மன் கோவிலில் நேற்று முன் தினம் காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தல் நடந்தது.இரவு மலர் அலங்காரத்தில்,  அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை, படுநெல்லி கிராமத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !