செல்லியம்மன் கோவில் ஆடிப்பூரம் விமரிசை
ADDED :1165 days ago
மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சியில் உள்ள செல்லியம்மன் கோவில் ஆடிப்பூரம் விழா, விமரிசையாக நடந்தது.
மதுராந்தகம் நகராட்சி வன்னியர்பேட்டையில், சேற்றுக்கால் செல்லியம்மன் கோவில் உள்ளது. ஆடி மாத மகா உற்சவம், ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்படும். கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடு காரணமாக, இரு ஆண்டுகளாக பெரிய அளவில் இவ்விழா நடக்கவில்லை. இதனால், இந்த ஆண்டு விழாவை விமரிசையாக நடத்த, கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, ஆடி முதல் செவ்வாய்க்கிழமையான, கடந்த 19ல் காப்பு அணிதல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம், பெண்கள் ஊரணி பொங்கலிட்டும், நேர்த்திகடன் செலுத்தியும் அம்மனை வழிபட்டனர். நேற்று, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் அம்மன் ஊர்வலம் நடந்தது. அப்போது, கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்து, பெண்கள் வழிபட்டனர். நாளை தேர் திருவிழா நடக்கவுள்ளது.