மஞ்சள்பட்டணத்தில் மண்டலபிஷேக விழா
ADDED :1226 days ago
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி மஞ்சள்பட்டணம் சித்தி விநாயகர் கோயில் மண்டல அபிஷேக விழா நடந்தது. இக்கோயிலில் ஜூன் 16 அன்று நான்கு கால யாக பூஜைகள் நிறைவடைந்து மகா கும்பாபிஷேகம் நடந்தது. அன்று தொடங்கி தினமும் காலையில் மண்டல பூஜையையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. மண்டல பூஜை நிறைவு நாளான நேற்று காலை சிறப்பு ஹோமங்கள் நிறைவடைந்து பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து விநாயகருக்கு கலச அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாரதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவில் நிர்வாகிகள் வக்கீல் ராமதாஸ், ராமலிங்கம், முத்துச்சாமி, கனகராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.