உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகுவள்ளி அம்மன் கோயில் 12ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா

அழகுவள்ளி அம்மன் கோயில் 12ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா

கமுதி: கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் அழகுவள்ளி அம்மன் கோயில் 12ம் ஆண்டு ஆடிப்பெருக்கு பொங்கல் விழா முன்னிட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.தினந்தோறும் அழகுவள்ளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடந்தது.ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும், பெண்கள் கும்மியடித்தும் வந்தனர். இந்நிலையில் காலை கோயில் முன்பு கிராமமக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயிலில் இருந்து முளைப்பாரியை கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக தூக்கிச் சென்று கங்கையில் கரைத்தனர். விழாவில் கமுதி சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !