பரமக்குடியில் ஆக. 11 ல் ஆடி தேரோட்டம்
ADDED :1258 days ago
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில், பெருமாள் மோகினி அவதாரத்தில் அன்ன வாகனத்தில் வீதி வலம் வந்தார். இக்கோயிலில் நேற்று முன்தினம் ஆடி பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது. நேற்று பெருமாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். இன்று சேஷ வாகனத்திலும், நாளை கருட வாகனத்திலும் வீதி வலம் வர உள்ளார். தொடர்ந்து வரும் ஆக. 11 அன்று காலை ஆடி தேரோட்டம் நடக்கிறது.