நாகம்மாள் கோயில் திருவிழா
ADDED :1181 days ago
வேடசந்தூர்: வேடசந்தூர் நாகம்மாள் திருக்கோவிலில் 24 ஆம் ஆண்டு கோவில் திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது, மங்கள வாத்தியம், கணபதி பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில், குடகனாற்றில் இருந்து கரகம் அலங்கரித்து ஆலயம் கொண்டுவரப்பட்டது. மாவிளக்கு, முளைப்பாரி, அக்கினி சட்டி எடுத்தல், கரகம் நீராடுதலுடன் கரகம் ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.