மாதா அமிர்தானந்தமயி சேவா சமிதி சார்பில் விளக்கு பூஜை
ADDED :1200 days ago
அவிநாசி: வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, மாதா அமிர்தானந்தமயி சேவா சமிதி சார்பில், தீப விளக்கு பூஜை நடைபெற்றது.
அவிநாசி அடுத்த ஆட்டையாம்பாளையம் செந்தூர் மஹாலில் ஸ்ரீ சர்வைஸ்வர்ய தீப விளக்கு பூஜை ஆடி மாதம் வளர்பிறை அஷ்டமி தினத்தில் வரும் வெள்ளி அன்று வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு மாதா அமிர்தானந்தமயி சேவா சமிதி சார்பில், ஸ்ரீ சர்வைஸ்வரிய தீப விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் அமிர்த வித்யாலயம் தாளாளர் சுவாமினி நிருபமாமிர்த சைதன்யா வழிகாட்டுதல் ஆசியுரை வழங்கி தலைமையேற்றார். இதனையடுத்து, 500ம் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட தீபவிளக்கு பூஜைதொடங்கியது. மேலும் பஜனை, சத்சங்கம், ஆரதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அரங்கேறியது. தீப விளக்கு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவினை செந்தூர் மஹால் நிர்வாகத்தினர் ஒருங்கிணைத்தனர்.