மெய்கண்டார் கோவில் மண்டல பூஜை விழா
ADDED :1152 days ago
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் மெய்கண்டார் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.இக்கோவில் மகா கும்பாபிேஷகம் கடந்த ஜூன் 17ம் தேதி நடந்தது. அதனைத் தொடர்ந்து மண்டல பூஜை நடந்தது. நிறைவு நாளான நேற்று, காலை சன்னிதானம் புறப்பாடு, மகா அபிஷேக ஆராதனை, யாகசாலை பூஜை நடந்தது. விழாவில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று ஆசி வழங்கினார்.ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீன நிர்வாகிகள், திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள், மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.