உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி மாதத்தில் அற்புத காட்சி : மூலவர் சிலை மீது உட்கார்ந்த சேவல், பொதுமக்கள் நேரில் பார்த்து பரவசம்

ஆடி மாதத்தில் அற்புத காட்சி : மூலவர் சிலை மீது உட்கார்ந்த சேவல், பொதுமக்கள் நேரில் பார்த்து பரவசம்

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே கோவிலுக்கு நேர்த்திகடன் செலுத்திய சேவல்  மூலவர் சிலை மீது தொடர்ந்து 3வது நாளாக அமர்ந்ததால் பொது மக்கள் பக்தி பரவசத்துடன் பார்த்து செல்கின்றனர்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சதுமுகையில் பவானி ஆறு செல்லும் வழியில் ஸ்ரீமேட்டுகாட்டு கருப்பராயன்,ஸ்ரீவனகாளியம்மன் கோவில் உள்ளது.கடந்த ஆடி 18 அன்று ஆடித்திருவிழா சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.அன்று சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர் கோவிலுக்கு சேவல் ஒன்றை நேர்த்திக்கடனாக வழங்கினார்.ஆடி 18 அன்று மாலையே அம்மனின் பாதத்தில் வந்து அமர்ந்து கொண்டது.காலை வெளியில் சென்று விட்டு மாலை அம்மனின் பாதத்தில் வந்து அமர்ந்து கொள்கிறது.இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து அதே இடத்தில் வந்து அமர்ந்தது. இதைபார்த்த அந்த பகுதி பொது மக்கள் பக்தி பரவசத்துடன் ஆடி மாதத்தில் அற்புதக்காட்சி என  பார்த்து செல்கின்றனர்.இச்செய்தி சத்தியமங்கலம் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !