சேதுக்கரையில் மண்டல பூஜை விழா
ADDED :1156 days ago
சேதுக்கரை: சேதுக்கரை அருகே பாப்பாத்தி காளியம்மன் கோயிலில் கடந்த ஜூன் 19ல் கும்பாபிஷேகம் நடந்தது. 48 நாட்கள் நிறைவானதால் மண்டலபிஷேக பூஜை முன்னிட்டு கோயிலில் யாகசாலை பூஜை உள்ளிட்ட ஹோம வேள்விகள் நடந்தது. மூலவர் பாப்பாத்தி காளியம்மன், கருப்பணசாமி, மாடசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தரிசனம் செய்தனர். பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பூஜகர் முருகாண்டி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.