பரமக்குடியில் ஆடி வெள்ளி வழிபாடு
ADDED :1489 days ago
பரமக்குடி: பரமக்குடியில் நேற்று ஆடி வெள்ளி வரலட்சுமி நோன்பு சிறப்பு வழிபாடு நடந்தது. வரலட்சுமி நோன்பு விழாவையொட்டி, வீடுகளில் அம்மன், தாயார் அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். மேலும் வீடுகளில் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு மற்றும் துணி வகைகளை கொடுத்து பிரசாதங்களை வழங்கினர். தொடர்ந்து அனைத்து கோயில்களிலும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பரமக்குடி துர்க்கை அம்மன், முத்தாலம்மன், சாத்தாயி அம்மன் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.