அருணாசலேஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி உற்சவம்: சுவாமி மாடவீதி உலா
ADDED :1492 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று இரவு நடந்த சுந்தரமூர்த்தி உற்சவத்தை முன்னிட்டு, ரிஷப வாகனத்தில் உண்ணாமலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார், யானை வாகனத்தில் சுந்தரமூர்த்தி சுவாமி, குதிரை வாகனத்தில் சேரமான் ராஜா மும்மூர்த்திகளாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாடவீதி உலா வந்து அருள்பாலித்தனார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.