உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிய வீட்டம்மன் கோயிலில் நூதனத் திருவிழா

பெரிய வீட்டம்மன் கோயிலில் நூதனத் திருவிழா

திருவண்ணாமலை : புகுந்த வீட்டு பெண்களை புறக்கணித்து பிறந்த வீட்டு பெண்களை மட்டும் அழைத்து  அரசம்பட்டு கிராமத்தில் காட்டுப்பகுதியில் உள்ள பெரிய வீட்டம்மன் கோயிலில் நூதனத் திருவிழா நடந்தது.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுக்கா, அரசம்பட்டு கிராமத்தில் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு  8 அண்ணன்களுக்கு ஒரே தங்கையாக பிறந்தவள் பெரிய வீட்டு அம்மன். இவன் திருமணமாகி மகப்பேறு காலத்தில்  தாய் வீட்டுக்கு வந்தார். அப்போது அண்ணனின் மனைவிகள் அண்ணன் முன்பு பாசமாக பேசி பின்னர் அண்ணிகள் செய்த கொடுமையாலும் அபாண்டமான  பழியினால் அம்மன் வீட்டைவிட்டு வெளியேறி காட்டுக்குள் சென்றது .  இதன்  காரணத்தால் காட்டுப்பகுதியில் உள்ள சித்திரைமுள் பாறை மீது அமர்ந்து விட்டதாக  கூறப்படுகிறது. பின்னர் அங்கேயே அம்மனுக்கு  ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது தங்கையை காணவில்லை என,  அண்ணன்கள் காட்டு பகுதிக்குள்  சென்று தங்கையே தேடி வந்தனர். அப்போது அண்ணன்கள் கண்ணில் மட்டும் தோன்றி தான் தெய்வமாகிவிட்டேன் . எனக்கு அண்ணன்,  தம்பிகள், உங்கள் வயிற்றில் பிறந்த பிறப்புகள் எனக்கு பூஜை செய்து வழிபடலாம்.

பூஜையில் புகுந்த வீட்டு  பெண்களான மாமியார்கள்  மற்றும் மருமகள்கள் என்னுடைய பூஜையை பார்க்கக்கூடாது அப்படி பார்த்தால் அவர்களை கண்டிப்பாக தண்டிப்பேன் எனக் கூறி மறைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதை மீறி அம்மனை பூஜை நேரத்தில் பார்த்த புகுந்த வீட்டு பெண்களுக்கு பார்வை மற்றும் நோய் உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து கிராமத்தில் உள்ள பெண்கள் படைவீட்டம்மன் பூஜை நேரத்தில் யாரும் சென்று பார்ப்பதில்லை. இதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஆடி மாத  அரசம்பட்டு கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் சித்திரைமுள் பாறையில் உள்ள பெரியவீட்டம்மன் கோயில் திருவிழா நடத்துவது வழக்கம்.

அரசம்பட்டு  கிராமத்தில்  பிறந்த பெண்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுதமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து அனைவரும் கோயிலுக்கு வந்து ஊரணி பொங்கல் இட்டு பெரியவீட்டம்  மனை வழிபட்டனர். படையல்லிட்ட சாதத்தை அனைவரும் கோயிலில் அமர்ந்து சாப்பிட்டனர். அந்த ஊரைச் சேர்ந்த மாமியார்கள் மற்றும் மருமகள்கள் யாரும் இந்த நூதன திருவிழாவில்   கலந்து கொள்ளவில்லை. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பெரியவீட்டம்மன் கோயிலில் வழங்கப்பட்ட சாதத்தை வாங்கி பயபக்தியுடன் சாப்பிட்டனர். அங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டினர். குழந்தை பெற்ற பெண் பக்தர்கள் வேண்டுதலை  நிறைவேற்ற எடைக்கு எடை நாணயம், திருமணத்தடை நீங்கி திருமணம்மாணவர்கள் தம்பதிகளாக வந்து மாங்கல்யம்  ஆகியவற்றை  கோயில் உண்டியில் காணிக்கை  செலுத்தினர். குன்றின் மீது உள்ள சுணை நீரை பொதுமக்கள் தீராத நோய் தீர்க்கும் தீர்த்தமாக வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். பக்தர்களுக்குஇளைஞர்கள் அன்னதானம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அரசம்பட்டு கிராம பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் விழா குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !