நாலுகோட்டைகோயிலில் 1008 திருவிளக்கு பூஜை
ADDED :1213 days ago
சிவகங்கை : சிவகங்கை அருகேயுள்ள நாலுகோட்டை கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
இங்கு காளியம்மன் பூர்ண கலா புஷ்கலா சமேத அதிகுந்த வரத அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றனர். ஆடியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து ஆயிரத்து எட்டு திருவிளக்கு ஏற்றி பெண்கள் சிறப்பு பூஜை நடத்தினர்.காளியம்மனுக்கு கற்பூர ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை ஊராட்சித்தலைவர் மணிகண்டன் செய்திருந்தார்.