திரவுபதி கோவிலில் ரத உற்சவம்
ADDED :1154 days ago
நகரி: சித்துார் மாவட்டம், புத்துார் டவுனில் அமைந்துள்ள திரவுபதியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான தீமிதி திருவிழா, கடந்த மாதம், 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மதியம் மஹாபாரதம் நடந்து வந்தது. கடந்த 5ம் தேதி அர்ச்சுனன் தபசு, 6ம் தேதி காலையில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும் நடந்தது.மாலை 6:00 மணிக்கு, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீமிதித்தனர்.இந்நிலையில், நேற்று, மாலை 4:00 மணிக்கு ரத உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் வழிபட்டனர்.இரவு 9:00 மணிக்கு, சூர்யபிரபை வாகனத்தில் உற்சவர் திரவுபதியம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.