சித்தி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :1154 days ago
உடுமலை:உடுமலை பழனியாண்டவர் நகர் சித்தி விநாயகர் கோவிலில், திருவிளக்கு பூஜை மற்றும் வரலட்சுமி விரத பூஜை நடந்தது.உடுமலை பழனியாண்டவர் நகர், சித்தி விநாயகர் கோவிலில், சித்தி விநாயகர், பாலமுருகன், விஷ்ணு துர்க்கை, நவகிரக நாயகர்கள் சன்னதி அமைந்துள்ளது.கோவிலில், ஆடி மாதத்தையொட்டி, திருவிளக்கு பூஜை மற்றும் வரலட்சுமி விரத பூஜை நடந்தது. பெண்கள் திருவிளக்கேற்றி சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்.தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.