மகாலட்சுமி கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :1255 days ago
பெ.நா.பாளையம்: ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையையொட்டி தடாகம் புதூர் மகாலட்சுமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், வரலட்சுமி விரதத்தையொட்டி வளையல், குங்குமம், மஞ்சள், மாங்கல்ய கயிறு ஆகியன பெண்களுக்கு வழங்கப்பட்டன. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல குண்டுகள் மாரியம்மன் கோவிலில் வரலட்சுமி விரதத்தையொட்டி விளக்க பூஜை நடந்தது. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.