உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒவ்வொன்றும் ஒருவிதம்

ஒவ்வொன்றும் ஒருவிதம்


அணில் ஒன்று தாழ்வு மனப்பான்மையால் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தது. சிட்டுக்குருவி, புலி, மீன் என யாரைப் பார்த்தாலும் ஒரு புலம்பல். தன்னால் அவர்களைப்போல் செயல்பட முடியவில்லையே என ஏக்கம். இதை கவனித்த சிட்டுக்குருவி, ‘‘ஏன் கவலையாக இருக்கிறாய்’’ எனக்கேட்டது. அதுவும் தன் மனநிலையை சொன்னது.    
‘‘அடப்பாவி... இது தான் உன் கவலையா. போடா... போ. என்னால் பறக்க முடியும். நீயோ மரம், மலை என எதுவாக இருந்தாலும் எளிதாக கடந்துவிடுவாய். என்னால் முடியுமா? அதுபோல்தான் உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிர்களுக்கும் பல்வேறு திறமைகள் இருக்கும். ஒவ்வொன்றும் ஒருவிதம். யாரும் யாரையும் ஒப்பிட்டு பார்ப்பதில் அர்த்தமே இல்லை’’ என அறிவுரை கூறியது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !