முருகனின் மயிலுக்கு பல பெயர்கள் உள்ளதா?
ADDED :1162 days ago
முருகன் அவதரித்தபோது தேவர்கள் அனைவரும் கைலாயம் வந்தனர். இந்திரன் குழந்தை முருகனுக்கு மயிலைப் பரிசாகக்கொடுத்து மகிழ்ந்தான். அதனால், அந்த மயிலுக்கு இந்திரமயில் என்று பெயர். மாங்கனிக்காக முருகன் வலம் வந்தது அந்த மயிலில் தான். சூரசம்ஹாரத்தின் போது, மாமரமாய் நின்ற சூரபத்மனை வேலால் பிளந்தார் முருகன். அது மயிலாகவும், சேவலாகவும் மாறியது. அந்த மயில் அசுரமயில்.