பக்திக்கும் இசைக்கும் நெருக்கம் உண்டு என்பது ஏன்?
ADDED :1162 days ago
இசை மூலம் இறைவனை எளிதாக அடைய முடியும் என்கிறார் காஞ்சிப் பெரியவர். நாயன்மார்கள், ஆழ்வார்கள் என அருளாளர்கள் அனைவரும் இசையால் இறைவனை அடைந்தவர்களே. சுந்தரர் சிவனை, ஏழிசையாய், இசைப்பயனாய் இருப்பவனே என்று குறிப்பிடுகிறார். இன்னிசையால் தமிழ் பாடுபவர் என்று சம்பந்தரை சிறப்பித்து சொல்வார்கள். இசை ஞானம் இல்லாதவர்கள் கூட, பாடல்களைக் கேட்பதன் மூலம் இறைவனிடம் பக்தி செலுத்தலாம்.