உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துவரிமான் சக்தி மாரியம்மன் கோயில் விழா

துவரிமான் சக்தி மாரியம்மன் கோயில் விழா

சோழவந்தான்: மதுரை துவரிமான் சக்தி மாரியம்மன் கோயில் மகா உற்ஸவ 80வது ஆண்டு விழா ஆக.,2ல் யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆக.,8ல் அம்மனுக்கு பூச்சோடணையும், சந்தன காப்பு அலங்காரம் மற்றும் புஷ்பாஞ்சலி நடந்தது. இன்று அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் செல்லுரர் ராஜூதுவக்கி வைத்தார். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !