உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதி மலையம்மன் கோவில் தேரோட்டம் : 60 ஆண்டுகளுக்கு பின் கோலாகலம்

பகவதி மலையம்மன் கோவில் தேரோட்டம் : 60 ஆண்டுகளுக்கு பின் கோலாகலம்

தியாகதுருகம்: பகவதி மலையம்மன் கோயில் தேர் திருவிழா 60 ஆண்டுகளுக்குப் பின் பிரிதிவிமங்கலத்தில் நடந்தது.தியாகதுருகம் நகரை ஒட்டி உள்ள வரலாற்று சிறப்புமிக்க மலை மீது நூற்றாண்டுகள் பழமையான பகவதி மலையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா அருகில் உள்ள பிரதிவிமங்கலம் கிராமத்தில் நடத்தப்பட்டு வந்தது. கடந்த 60 ஆண்டுகளாக திருவிழா நடக்கவில்லை. இந்நிலையில் இவ்வாண்டு திருவிழாவை நடத்த ஊர் பொதுமக்கள் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை துவக்கினர். கடந்த மாதம் 26 ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. இரவு சர்வ அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து ஊர் பொதுமக்கள் கூடி வடம் பிடித்து ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !