உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதி மகாசக்தி மாரியம்மன் கோயில் உற்ஸவ விழா

ஆதி மகாசக்தி மாரியம்மன் கோயில் உற்ஸவ விழா

அலங்காநல்லூர்: மதுரை மேலப்பனங்காடி ஆதி மகாசக்தி மாரியம்மன் கோயில் உற்ஸவ விழா ஆக.,2 காப்பு கட்டுதலுடன் துவங்கியது. காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் நேற்று பால்குடம் எடுத்து  நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. முனியாண்டி கோயிலில் இருந்து சக்தி கரகம், முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.  அன்னதானம் வழங்கப்பட்டது. தினமும் இரவு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !