உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோழியூரில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பால்குட ஊர்வலம்

கோழியூரில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பால்குட ஊர்வலம்

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த கோழியூரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திட்டக்குடி அடுத்த கோழியூரில் உள்ள மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா, கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மாரியம்மன் கதையை சொல்லும் பாரதம் தினசரி நடந்தது. கடைசிநாளான  நேற்று, கழுமரம் ஏறும் நிகழ்ச்சி காலையில் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் சுமந்தும், அலகு போட்டும், தீச்சட்டி ஏந்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். பாலால் மாரியம்மனுக்கு  அபிஷேகம் செய்யப்பட்டு, மலரால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாரத குழுவினர், கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !