உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாலங்காடில் காளி உற்சவம்

திருவாலங்காடில் காளி உற்சவம்

திருவாலங்காடு: திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் கோவிலுடன் இணைந்தது திருவாலங்காடு பத்ரகாளியம்மன் கோவில். இந்த கோவிலில், ஆடி மாதம் 9 நாள்  நடைபெறும் காளி உற்சவம் கடந்த 2ம் தேதி துவங்கியது.அதை தொடர்ந்து எட்டு நாட்கள், மாலை 7:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இன்று,  காலை 6:00 மணிக்கு நிசும்பன் படுகளம் நடைபெற உள்ள நிலையில், 8ம் நாளான நேற்று, பத்ரகாளியம்மனுக்கு, கோவில் வளாகத்தில் நுாற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஆடி  செவ்வாய் மற்றும் காளி உற்சவத்தை ஒட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !