உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னியம்மன் கோவில் ஆடி சிறப்பு உற்சவம்

அன்னியம்மன் கோவில் ஆடி சிறப்பு உற்சவம்

ஆர்.கே.பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிபாக்கம் அருகே, சேரிஅய்யம்பேட்டையில் அமைந்துள்ளது அன்னியம்மன் கோவில். ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனுார், அம்மையார்குப்பத்தைச் சேர்ந்த  ஏராளமான பக்தர்கள், அன்னியம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன், வங்கனுார் மற்றும் அம்மையார்குப்பத்தில், அன்னியம்மன் கோவில்கள் கட்டப்பட்டன. வங்கனுார்  அம்மனியம்மன் கோவிலில், நேற்று, ஆடி சிறப்பு உற்சவம் நடந்தது.இதில், திரளான பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். கோவில் வளாகத்தில், பெரியாண்டவர் பூஜையும்  நடத்தப்பட்டது. இதே போல், அம்மையார்குப்பம், அன்னியம்மன் கோவிலிலும் ஆடி சிறப்பு உற்சவம் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !