உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் பூச்சாட்டு திருவிழாவில் கொம்பன்கள் ஊர்வலம்

அன்னூர் பூச்சாட்டு திருவிழாவில் கொம்பன்கள் ஊர்வலம்

அன்னூர்: அன்னூரில், கருப்பராயன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில், கொம்பன்களின் ஊர்வலம் நடந்தது. அன்னூர், சத்தி ரோடு, இந்திரா நகரில், கருப்பராயன், மதுரை வீரன், அண்ணமார் சாமி கோவில்  உள்ளது. இக்கோவிலில், 50வது ஆண்டு பூச்சாட்டு திருவிழா கடந்த 7ம் தேதி நள்ளிரவு, மயானத்தில் முனி பூஜை உடன் துவங்கியது. அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து கொம்பன்களின்  ஊர்வலம் கடந்த 8ம் தேதி மாலை துவங்கியது. மெயின் ரோடு, சத்தி ரோடு வழியாக கோவிலை அடைந்தது. அங்கு கொம்பன்கள் பட்டியில் வைத்து கட்டப்பட்டன. வரும் 11ம் தேதி மதியம் அங்காளம்மன்  கோவிலில் இருந்து, செல்லாண்டியம்மன் தேர் அலகு குத்தி ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி ஜமாப் இசையுடன் நடக்கிறது. வரும் 12ம் தேதி, அதிகாலை 3:00 மணிக்கு, அம்மன் அழைத்தல், காலை 6:00  மணிக்கு, பட்டத்தரசி அம்மனுக்கு, பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்து வருதல், மதியம் கொம்பன்களுக்கு பூஜை செய்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, இந்திரா நகர் பொதுமக்கள் செய்து  வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !