பரமக்குடியில் நவநீத கிருஷ்ணனாக பெருமாள் முத்துப் பல்லக்கில் வீதி உலா
ADDED :1157 days ago
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில், பெருமாள் நவநீத கிருஷ்ணனாக முத்துப் பல்லக்கில் வீதி வலம் வந்தார்.
இக்கோயில் பிரம்மோற்ஸவ விழாவையொட்டி, தினமும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வருகிறார். ஆக. 8 அன்று ஆண்டாள், பெருமாள் மாலை ஆற்றல் நிகழ்ச்சியும், நேற்று இரவு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பூ பல்லக்கில் வலம் வந்தார். இன்று காலை முத்துப் பல்லக்கில் பெருமாள் தவழும் கண்ணனாக நவநீதகிருஷ்ணன் திருக்கோளத்திலும், இரவு குதிரை வாகனத்தில் அலங்காரமாகி அருள் பாலித்தார். நாளை காலை 9:30 மணிக்கு மேல் பெருமாள் ஆடி தேரோட்டம் நடக்கிறது.