உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையப்பபுரம் கோயிலில் இன்று கொடை விழா

திருமலையப்பபுரம் கோயிலில் இன்று கொடை விழா

ஆழ்வார்குறிச்சி: திருமலையப்பபுரம் மங்கை நாயகி அம்மன் கோயிலில் இன்று (14ம் தேதி) கொடை விழா நடக்கிறது.திருமலையப்பபுரம் மங்கை நாயகி அம்மன் கோயிலில் கொடை விழாவை முன்னிட்டு இன்று (14ம் தேதி) காலை 8.30 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல், 11 மணிக்கு அலகு தீர்த்தம் எடுத்து வருதல், மதியம் 1 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 3 மணிக்கு கும்பம் வீதிவலம் வருதல், 4 மணிக்கு ஒவ்வொரு வீட்டின் முன்பும் பொங்கலிடுதல், இரவு 12 மணிக்கு அலகு தீர்த்தம் கொண்டு வருதல், 1 மணிக்கு அலங்கார தீபாராதனை, 2 மணிக்கு அம்பாள் வீதிவலம் வருதல் ஆகியன நடக்கிறது.நாளை (15ம் தேதி) காலை 5.30 மணிக்கு படைப்பு, தீபாராதனை, 6.30 மணிக்கு அம்பாள் ராமநதியில் முளைக்கொட்டி வருதல், 8 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு வானவில் குழுவினரின் இன்னிசை கச்சேரி ஆகியன நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஐந்து சமுதாயத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !