கனவாய் கருப்பணசாமி கோவிலில் ஆடி உற்சவ விழா
ADDED :1204 days ago
கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டி கணவாய்கருப்பணசாமி கோவிலில் ஆடிச் சிறப்பு உற்சவ விழா நடந்து வருகிறது.
விழாவையொட்டி கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி சாமி சாட்டுதல் மற்றும் எஸ்.கொடை, கோட்டைக்காரன்பட்டி, மேட்டுப்பட்டி, மாமரத்துப்பட்டி, ஒத்தக்கடை, கொரசின்னம்பட்டி, குரும்பபட்டி, மலைப்பட்டி மற்றும் கணவாய்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் காப்புகட்டுதளுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் கருப்பசாமிக்கு அபிஷேக அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை ஆகஸ்ட் 12 சாமிக்கு பழம் வைத்தல் நிகழ்ச்சி மற்றும் கிடாய் வெட்டி அன்னதானம் நடைபெறும். இத்துடன் ஆடி சிறப்பு விழா நிறைவு பெறுகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.