சகோதரத்துவத்தை உணர்த்தும் ரட்சா பந்தன் விழா கோலாகலம்
ADDED :1150 days ago
சகோதரத்துவத்தை உணர்த்தும், ரட்சாபந்தன் விழா பல்வேறு பகுதிகளில் இன்று உற்சாகமாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது. இந்தியா முழுவதும், ஆவணி மாத பவுர்ணமி நாளில், சகோதரத்துவத்தை உணர்த்தும், ரட்சா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது. உடன்பிறந்த சகோதரர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களையும், தங்கள் சகோதரர்களாக ஏற்று, "ராக்கி (வலது கையில் கயிறு கட்டுவது) கட்டுவதை, பெண்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இந்த விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக, வடமாநிலத்தவர்கள் அதிகம் வாழும், வேப்பேரி, எம்.கே.பி.,நகர், சவுகார்பேட்டை ஆகிய பகுதிகளில், கோலாகலமாகவும், உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டது. பெண்கள், தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர்.