உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி கோயில் உண்டியல்களில் ரூ.32 லட்சம் காணிக்கை வரவு

சதுரகிரி கோயில் உண்டியல்களில் ரூ.32 லட்சம் காணிக்கை வரவு

வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் ஆடி அமாவாசை திருவிழாவில் ரூ.32 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்தது.

இக்கோயில்களில் ஆடி அமாவாசை திருவிழா முடிந்த நிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கலைவாணன் தலைமையில், அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் நாகராஜன் முன்னிலையில் இரு நாட்களாக நடந்தது. இதில் சுந்தர மகாலிங்கம் கோயிலில் ரூ. 29 லட்சத்து 37 ஆயிரத்து 302 ரொக்கமும், 30 கிராம் தங்கமும், 285 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக வரப்பெற்றுள்ளது. சந்தனமகாலிங்க கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.3 லட்சத்து 15 ஆயிரத்து 356 வரப்பெற்றுள்ளது. காணிக்கைகள் எண்ணும் பணியில் கல்லூரி மாணவர்கள், கோயில் ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !