முத்து மாரியம்மன் கோயில் உற்ஸவ விழா
ADDED :1149 days ago
அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் சி.ஆர்.,காலனி முத்து மாரியம்மன் கோயில் 14ம் ஆண்டு உற்ஸவ விழா 3 நாட்கள் நடந்தது. ஜூலை 27ல் அழகர்கோயில் சென்று தீர்த்தம் எடுத்து அம்மனுக்கு காப்பு கட்டினர். சிறப்பு யாக பூஜையை தொடர்ந்து கரகம் ஜோடித்து வழிபாடுகள் நடந்தன. பக்தர்கள் மாவிளக்கு, பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிளக்கு பூஜையில் மகாமுனீஸ்வரர் பக்தி குழுவினர் பாடினர். அன்னதானம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.