உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதார திருவிழா

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதார திருவிழா

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதார திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளத்தில் ஆடி மாதம் அவதரித்த சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் அவதார திருவிழா நேற்று நடைபெற்றது முன்னிட்டு காலை 10:15 மணிக்கு ஜீவ ஒடுக்கமான இடத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்,பூர்ணாகுதி பூஜையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோயில் முன்பாக யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அன்னதானம் நடைபெற்றது.கட்டிக்குளம்,மானாமதுரை, சிவகங்கை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, உள்ளிட்ட  பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.இரவு 8:00 மணிக்கு பூப்பல்லக்கில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பரமசிவம்,சேகர், தண்டாயுதபாணி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !