ஆடிப்பூர கஞ்சிகலய ஊர்வலம்
ADDED :4818 days ago
பந்தலூர்: பந்தலூர் அருகே கொளப்பள்ளியில் நடந்த ஆடிப்பூர கஞ்சிகலய ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக வழிபாடு மன்றத்தின் சார்பில், கொளப்பள்ளியில் ஆடிபூர கஞ்சிகலய ஊர்வலம் நடந்தது. குறிஞ்சிநகர் முருகன் கோவிலில், குருக்கள் பரமசிவம் தலைமையில், மாவட்ட ஊராட்சிமன்ற உறுப்பினர் சவுந்தரராஜன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். கவுன்சிலர்கள் மனோகரி, ரமேஷ், கோவில் கமிட்டி செயலாளர் கவிந்தன், பொருளாளர் சிவகுமார் முன்னிலை வகித்தனர். தலைவர் சற்குணம், செயலாளர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.