உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்துமாரியம்மன் கோயிலில் செடல் திருவிழா

புத்துமாரியம்மன் கோயிலில் செடல் திருவிழா

வடலூர்: குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன் கோயில் செடல் திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது.

குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோயில் செடல் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 4ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமிக்கு தினம் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இரவில் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று வெள்ளிக்கிழமை செடல் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். இன்று 13ம் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை செயல் சிவக்குமார் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !