விநாயகர் சதுர்த்திக்கு விளாச்சேரியில் தயாராகும் மெகா விநாயகர் சிலைகள்
ADDED :1247 days ago
திருப்பரங்குன்றம்: மதுரை விளாச்சேரியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்காக 8 முதல் 12 அடி உயர மெகா களிமண் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. பிச்சை கூறுகையில், ஆண்டுதோறும் இந்த பெரிய விநாயகர் சிலைகள் 20 முதல் 30 வரை தயாரித்து விற்பனை செய்வோம். இரண்டு ஆண்டுகள் கொரோனா தடையால் விநாயகர் ஊர்வலம் இல்லாத சூழ்நிலையில் தயாரிக்கவில்லை. இந்த ஆண்டு விநாயகர் சிலைகளுக்கு போதிய ஆர்டர்கள் இல்லை. இதுவரை நான்கு பேர் மட்டுமே ஆர்டர் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு மட்டுமே சிலைகள் தயாரிக்கிறோம் என்றார்.