ஆடிப்பூரம்: கஞ்சி கலயம், அக்னிசட்டி ஊர்வலம்
ADDED :1163 days ago
மேலூர்: மேலுார், நொண்டிக்கோவில்பட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி மாவட்ட பொறுப்பாளர், பணிமலர் மேலுார் நிர்வாகிகள் ஜோதிலெட்சுமி, செல்லம்மாள் தலைமையில் கஞ்சி கலய, முளைப்பாரி மற்றும் அக்னிசட்டி ஊர்வலம் நடைபெற்றது. நொண்டிக் கோவில்பட்டி மன்றத்தில் இருந்து பக்தர்கள் கஞ்சிகலயத்தை சுமந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் மன்றத்திற்கு வந்தனர். அங்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.