காளஹஸ்தி சிவன் கோயிலில் மதுரை மாவட்ட நீதிபதி தரிசனம்
ADDED :1517 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு இன்று மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆர். தரணி என்பவர் சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசனம் ஏற்பாடுகளையும் செய்தனர். கோயிலுக்குள் சென்றவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசூனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் கோயில் ஆணையாளர் மல்லிகார்ஜுன் வழங்கினார்.