உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை முனியாண்டி கோயில்களில் ஆடித்திருவிழா

வடமதுரை முனியாண்டி கோயில்களில் ஆடித்திருவிழா

வடமதுரை: வடமதுரை மேற்குரத வீதி முனியாண்டி கோயில் ஆடி உற்ஸவ திருவிழா 2 நாட்கள் நடந்தது. நேற்றுமுன்தினம் பால் குடங்களுடன் ஊர்வலமான வந்த பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். இரவு அலங்கரிக்கப்பட்ட மின் ரதத்தில் சுவாமி ரத ஊர்வலம் தேரடி வீதிகள் வழியே வலம் வந்தது. நேற்று காலை பொங்கல் வைத்து 25 ஆட்டு| கிடாய்களை வெட்டி பொது விருந்து வழங்கப்பட்டது.* அய்யலூர் அருகே ரோட்டுபுதூர் விலங்கு கருப்பணசுவாமி கோயிலில் 3 நாட்கள் ஆடி உற்ஸவ திருவிழா நடந்தது. கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில் தீர்த்தம் எடுத்தல், பொங்கல் அழைப்பு 121 ஆட்டு கிடாக்கள் வெட்டி பொது விருந்து வழங்குதல் உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன. ஏற்பாட்டினை சுக்காம்பட்டி, அய்யலூர், சித்துவார்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !