உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கவ்டால் முனீஸ்வரர் கோவில் விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

கவ்டால் முனீஸ்வரர் கோவில் விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஊட்டி: ஊட்டி பழைய கலெக்டர் அலுவலகம் அருகில், புதுமந்து செல்லும் சாலையில் பழமை வாய்ந்த கவ்டால் முனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை, 5:00 மணிக்கு முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 7:00 மணிக்கு ஆராதனை நடைபெற்றது. இதன் பின்னர் மதியம் 12:00 மணிக்கு உச்சி பூஜை நடைபெற்றது. அப்போது மலர் அலங்காரத்தில் முனீஸ்வரர் அருள் பாலித்தார். மேலும் கிடாவெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின்னர் அசைவ உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !