உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் சாரதா நவராத்திரி விழா

இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் சாரதா நவராத்திரி விழா

புதுச்சேரி: இரும்பை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.


புதுச்சேரி- திண்டிவனம் சாலை, இரும்பை குபேர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் சாரதா நவராத்திரி விழா துவங்கி நடந்து வருகிறது. நேற்று 3ம் நாள் விழாவில், காலை 10.00 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாணவர்களின் பரதநாட்டியம் நடந்தது. 21ம் தேதி மாலை 6:00 மணிக்கு அம்பாளுக்கு மகா சாந்தி அபிேஷகமும், 22ம் தேதி மாலை 6.00 மணிக்கு பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் டிரஸ்ட் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !