திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் உழவாரப்பணி மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நான்காம் பிரகாரத்தில், தேசிய இந்து திருக்கோவில்கள் பவுண்டேஷன் சார்பில் உழவாரப்பணி நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு, கோவில் வளாகம் முழுவதும் துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள், முக்கிய ஹிந்து கோவில்களில் ஆண்டு முழுவதும் உழவாரப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் விடுமுறை காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய கொளுத்தும் வெயிலும் பொருட்படுத்தாமல், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.