தொடர் விடுமுறை : ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
ADDED :1147 days ago
ராமேஸ்வரம்: தொடர் விடுமுறையால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆக.,13 முதல் 15 வரை தொடர் விடுமுறை என்பதால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கடந்த 3 நாள்களாக ராமேஸ்வரம் கோயிலுக்கு வருகை தந்தனர். 3ம் நாளான இன்றும் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடி விட்டு, கோயிலுக்குள் சுவாமி, அம்மன் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த 3 நாள்களாக ராமேஸ்வரம் கோயில் ரதவீதி, திட்டக்குடி, அக்னி தீர்த்த கடற்கரையில் கூட்டம் அலைமோதியது. மேலும் தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் கூட்டம் நிரம்பியது.