காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் யாகசாலை பூஜை துவக்கம்
ADDED :1158 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் வரும் 21ஆம் தேதி நடக்க இருக்கும் மகா கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று செவ்வாய் கிழமை காலை கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலை அருகில் வேத ஸ்வஸ்தி, யாகசாலை பிரவேசம், கலச ஸ்தாபனம் ,கணபதி ஹோமம், சத்துருவேத ஆவாஹனம், மந்திரபுஷ்பம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோயில் புனரமைக்கும் பணிகளின் நன்கொடையாளர்கள் ராமகிருஷ்ண, பிரசாத், ரவி, ஸ்ரீநிவாஸ் ஆகியோர் சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு அதனைத் தொடர்ந்து புதிய கோயிலை பரிசீலித்தனர் .மேலும் இவர்களுடன் கோயில் செயற்பொறியாளர் வெங்கட் நாராயணா கோயில் துணை ஆணையாளர் கஸ்தூரி, துணை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ரெட்டி, கோயில் கண்காணிப்பாளர் கோதண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.