உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் : ஆந்திர முதல்வருக்கு அழைப்பிதழ்

வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் : ஆந்திர முதல்வருக்கு அழைப்பிதழ்

காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் இம்மாதம் ஆகஸ்ட் 21ஆம் தேதி நடக்க இருக்கும் மகா கும்பாபிஷேகம் மற்றும் 2022 ஆண்டின் வருடாந்திர விநாயகர் சதுர்த்தி பிரம்மோற்சவத்திற்காக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை விஜயவாடாவில் உள்ள சி.எம். கேம்ப் அலுவலகத்தில் விநாயகர் கோயில் நிர்வாக அதிகாரி சுரேஷ் பாபு, பூதலப்பட்டு எம்எல்ஏ எம்.எஸ். பாபு, மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி ஆகியோர் சந்தித்து வரவேற்பு அழைப்பிதழை வழங்கியதோடு  கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.தொடர்ந்து தேவஸ்தான வேத பண்டிதர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு சிறப்பு ஆசிர்வாதம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !